ஆரோக்கியமாக, நோயின்றி வாழ பின்பற்ற வேண்டியவைகள் (ஒழுக்கமுறைகள்)
இதனை தொடர்ந்து செய்து வந்தால் எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம் நோயின்றியும் வாழலாம்.
உணவு சாப்பிடும் முறை:
1. பசியில்லாத போது சாப்பிடக் கூடாது.
2. டி.வி பார்த்து கொண்டோ, பாடல்கள் கேட்டு கொண்டோ சாப்பிடக் கூடாது.
3. பேசி கொண்டு சாப்பிடக் கூடாது.
4. புத்தகம் படித்து கொண்டு சாப்பிடக் கூடாது.
5. நின்று கொண்டு (பஃபே முறையில்) சாப்பிடக் கூடாது.
6. செல்போன் பேசி கொண்டு சாப்பிடக் கூடாது.
7. அம்மா தன் குழந்தைகளுடன் சாப்பிடக் கூடாது.
8. உணவில் கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும் (உணவை வாயில் போட்டவுடன் கண்களை மூடி சாப்பிடலாம், விக்கல் வராது) .
9. குக்கரில் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.
10. ஜீனி (white sugar) சேர்க்கக் கூடாது.
11. கால்களை தொங்கவிட்டு கொண்டு அமர்ந்து சாப்பிடக் கூடாது. கால்களை மடக்கி சம்மனங்கால் போட்டு சாப்பிட வேண்டும்.
(தரையில் அமர்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது)
12. குளித்த பின் 45 நிமிடத்திற்கு பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு 2.30 மணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.
13. சாப்பிடுவதற்கு முன்பு கை, கால், முகம் கழுவ வேண்டும்.
14. சாப்பிடுவதற்கு முன் இந்த உணவு எனக்கு நன்றாக ஜீரணம் ஆகும் என 5 முறை நினைத்து கொள்ளவும்.
15. உணவில் ஆறு சுவைகள் (இனிப்பு,உப்பு,கசப்பு,புளிப்பு,காரம்,துவர்ப்பு) இருக்க வேண்டும்.
(நெல்லிக்காயில் அறு சுவையும் உள்ளது)
16. முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும். பிறகு மற்ற சுவைகளை சேர்க்கவும்.
17. உணவுக்கும் சுவைக்கும் வித்தியாசம் அறிந்து கொள்ளுங்கள்.
18. நாக்கால் சுவையை ருசித்த பிறகே விழுங்க வேண்டும்.
19. சாப்பிடும்பொழுது உதட்டை மூடி,உதட்டை பிரிக்காமல் மென்று அரைத்து பின் விழுங்க வேண்டும்.
(வயதானவர்கள் கையிலேயே உணவை நன்கு பிசைந்து பிறகு முடிந்தவரை மென்று விழுங்கலாம்)
20. சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரம் முன்பும், பின்பும், சாப்பிடும் போதும் நீர் அருந்தக் கூடாது
21. சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் தேவைப்பட்டால் 3 முறை உள்ளங்கையில் நீரை உறிஞ்சி குடிக்கலாம்.(சிறிது நீர் குடிக்கலாம்)
22. முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிருத்தி கொள்ளவும்.
தண்ணீர் குடிக்கும் முறை:
1. தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.
2. மினரல் வாட்டர் பயன்படுத்தக் கூடாது.
3. நீரை பில்டர் செய்யக் கூடாது.
4. தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது.
5. தாகம் எடுத்தால் மட்டுமே தேவையான அளவுத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
6. நீரை மண்பானையில் 2 மணி நேரம் வைத்தபின் பயன்படுத்தலாம்.
7.சிறுநீர் கழித்தால் உடனே தண்ணீர் குடிக்க வேண்டும்.
8.நீரை அன்னாந்து குடிக்கக் கூடாது. மெதுவாக சப்பி குடிக்க வேண்டும்.
9.மாதம் ஒரு முறை காலையில் வெறும் வயிற்றில் 2லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, பசி எடுக்கும் வரை எதையும் சாப்பிடக் கூடாது.
தூங்கும் முறை:
1. வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது. ( காந்த அலை அதிகமாக இருக்கும்)
2. டீ, காபி குடிக்கக் கூடாது.
3. வெறும் தரையில் படுக்கக் கூடாது.
4. உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும்.
5. மனதுக்கும் புத்திக்கும் வேலை கொடுப்பவர்கள் குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
6. தூக்கத்திற்கும் ஓய்வுக்கும் உள்ள் வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
7. இரவில் பல் விலக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
8. தாடைக்கு கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
9. தலையில் உச்சிக்கும் , சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும்.
ஸ்வாசத்திற்கான முறை:
1.கொசுவர்த்தி , ஆல் அவுட் , குட்நைட் பயன்படுத்தக்கூடாது.
2.தூங்கும் பொழுது ஜன்னல்களை அடைத்து வைக்கக் கூடாது.
3.வீடு, அலுவலகம், தொழிற்சாலை, படுக்கை எப்பொழுதும் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும்.
4.நல்ல காற்றோட்டத்திற்கு எக்சாஸ்ட் ஃபேன் பயன்படுத்தலாம்.
5.கொசு கடிக்காமல் இருக்க கொசு வலை மட்டுமே பயன்படுத்தலாம்.
உடல் உழைப்பு:
1.தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும்.
2.இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிணநீர் ஓட உடல் உழைப்புத் தேவை.
3.உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிணநீஎ ஓட்டம் நன்றாக இருக்காது.இதுதான் பல நோய்களுக்கு காரணம்.
4.காலையில் உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்வது நல்லது.
5.உழைப்புக்கேற்ற உணவும் உணவுக்கேற்ற உழைப்பும் கட்டாயம் தேவை.
6.பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
7.A/C 37degree ல் மட்டுமே உபயோகம் செய்ய வேண்டும்.
.